சேலம்

ஆத்தூர் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

4th Jan 2021 01:25 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், ஆத்தூர் முள்ளுவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.வெங்கடேசன் மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் வி.முஸ்தபா சங்கீதா முருகேசன் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முடிவில் செயலாளர் ஏ.முருகேசன் நன்றி கூறினார்.

Tags : pongal gift
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT