சேலம்

காவிரியில் தண்ணீர் திறப்பு கதவணைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு

3rd Jan 2021 06:43 PM

ADVERTISEMENT

மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், கதவணை நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 
மேட்டூர் அணைப்பகுதியில் இருந்து பாசனத்திற்க்காக காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரானது, காவிரி ஆற்றின் குறுக்கே செக்கனூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கதவணைகளில் தேக்கப்பட்டு, நீர் மின் நிலையங்கள் வழியாக விடுவிக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள நீர் மின் நிலையங்கள் மூலமாக தலா 25 மெகாவட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவுவினை பொருத்து, கதவணைப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மின் திறனின் அளவு மாறுபடும் நிலையில், அண்மையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பகுதி பாசனத்திற்க்காக திறக்கப்படும் நீரின் அளவு அண்மையில் 3 ஆயிரம் கன அடியிலிருந்து, 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்மின் நிலையங்களில், மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் கதவணையினை ஒட்டியுள்ள சுற்றுப்புற பகுதிகளில், விவசாயத்திற்க்கான நீர் ஆதாரம் அதிகரித்துள்ள நிலையில், மீன் பிடித்தொழில் ஏற்றம் கண்டுள்ளது. தொடர்ந்து வரும் கோடைகாலத்தினை சமாளிக்கும் அளவிற்கு, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இருந்திட வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்பார்பாக உள்ளது.


 

Tags : salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT