சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனைமையத்தில் 1.80 கோடிக்கு பருத்தி விற்பனை

2nd Jan 2021 06:58 PM

ADVERTISEMENT

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 6500 பருத்தி மூட்டைகள் ரூ.1கோடியே 80 லட்சத்திற்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் கூட்டுறவு ஏலமையத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வகை தரும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்திகளை, இங்கு நடைபெறும் பொது ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மாநிலம் முழுவதும் பருத்தி அறுவடை அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக இம்மையத்தில் பருத்தி வரத்து அதிகரித்துள்ளது. 
இந்நிலையில், சனிக்கிழமை நாள் முழுதும் நடைபெற்ற பொதுஏலத்தில் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை அன்று கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நடைபெற்ற பொது ஏலத்திற்க்கு, 6500 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. அவை 1100 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, வேளாண் விற்பனைமைய அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. 
இதில் பி.டி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5279 முதல் ரூ.6379 வரை விலைபோனது. அதேபோல் டி.சி.ஹச் ரக பருத்தியானது. குவிண்டால் ஒன்றுக்கு  ரூ. 6500 முதல் ரூ.7379 வரை விலைபோனது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1.80 கோடிக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு 
பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் ஏலத்தில் பங்குகொண்டு, பருத்தியினை மொத்த கொள்முதல் செய்தனர். பருத்தி விலையானது ஏற்ற,இறக்கம் இன்றி கடந்த வாரத்தின் விலையினையே ஒத்திருந்ததாக விவசாயிகள் கூறினர்.


 

Tags : salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT