சேலம்

சுருளிப்பட்டியில் விவசாய சங்கம் சார்பில் இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

DIN

சுருளிப்பட்டியில் விவசாய சங்கம் சார்பில் இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான். பென்னிகுக் பிறந்த நாளை முன்னிட்டு, 5  மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பாக சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னி குக்கின் 180 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும் நாட்டு மாடுகளை பாதுகாக்கும் விதமாகவும் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் சுருளி பட்டியில் சுருளிப்பட்டி-சுருளி அருவிச்சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

5 மாவட்ட விவசாய சங்கத் தலைவர் எஸ்.ஆர் தேவர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பொன்காட்சி கண்ணன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், மாவட்ட செயலாளர் சலேத்து, பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் களஞ்சியம், வழக்கறிஞர் ஈசன் கலந்துகொண்டனர். சிவகங்கை ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி பிரபாகரன் கொடியை அசைத்து முதல் போட்டியை துவக்கி வைத்தார். பந்தயத்தில் முயல் சிட்டு, தேன் சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு, நடு மாடு, பெரியமாடு உட்பட 7 பிரிவுகளில் 227 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.  

மாடுகளின் வயது, பரிவுகளை வைத்து போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டது.  வெற்றிபெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமைதாரர்களுக்கு பரிசிகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட விவசாய சங்கத்தைச் சேர்ந்த அர்ச்சுனன், சேதுராமன், நாராயணன், சுப்பையா, கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமபுரங்களில் இருந்து வந்த ஆயிரக்கானக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் மாட்டுவண்டி பந்தையத்தை கண்டுகளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT