சேலம்

சந்தைப்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே குளத்தில் களர் செடிகள் அகற்றும் பணிகள் தொடக்கம் 

DIN

சந்தைப்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள குளத்தில் தேவையற்ற களர் செடிகளை அகற்றும் பணிகள் தொடங்கின.
சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைப்பேட்டை  ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள குளம் அப்பகுதியில் மழை நீர் சேமிக்கவும், நிலத்தடி நீர் அதிகரிக்கவும், குடிநீர் தேவைக்கு இல்லாமல் மற்ற தேவைகளுக்காக அந்த நீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் அக்குளத்தினை பராமரிக்காமல் விடப்பட்டதையடுத்து குப்பைகளை கொட்டியுள்ளனர். 
அதனையடுத்து குளங்கள் மறைத்து தேவையற்ற களர்செடிகள் அதிகளவில் வளர்ந்து மழைநீர் குளத்திற்குள் செல்லாமல் தடுத்து வருகின்றன. இதனையடுத்து சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட்  தலைவர் ஏ.ஆனந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் மழை நீரை சேமிக்க முதற்கட்டமாக குளத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற களர்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  
டிரஸ்ட் துணைத்தலைவர் எம்.பாலகிருஷ்ணன், செயலர் ராகவன், பொருளாளர் கணேஷ், நிர்வாகிகள் ஆர்.கார்த்திகேயன், முருகேசன், சரவணன்,  பன்னீர்செல்வம், வெங்கடேஷ், பொறியாளர் வேல்முருகன், கதிர்வேல், கிஷோர், ஷண்முகார்த்தி, காமராஜ், பி.கார்த்திகேயன்,  தரணீஷ், தரணீதரன், சந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 
தேவையற்ற களர்செடிகள் அதிகளவில் உள்ளதையடுத்து அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் இப்பணிகள் தொடர உள்ளதாக டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT