சேலம்

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டுக் காளை உயிரிழப்பு

20th Feb 2021 09:32 PM

ADVERTISEMENT

தருமபுரியில் கடந்த 13ஆம் தேதி ஜல்லிக்கட்டில் பங்கேற்றபோது, எதிரே வந்த காளை மீது மோதி காயமடைந்த, தம்மம்பட்டி காளை சனிக்கிழமை சிகிக்சை பலனின்றி உயிரிழந்தது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருபவர் மனோஜ். இவரது காளை பல வெளிமாவட்டங்களில் பங்கேற்று பிடிபடாமல் இருந்துவந்தது. இவரது காளை தம்மம்பட்டியில் பிப்.6ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றபோது, இவரது மாட்டை பிடிப்பவருக்கு மூன்று இலட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், இவரது காளையை யாரும் பிடிக்க முடியவில்லை. 

அதன்பின்னர், தருமபுரியில் 13ஆம் தேதி நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மனோஜின் காளை வீரா பங்கேற்றது. அப்போது சீறிப்பாய்ந்த அந்தக்காளை, திரும்பவும் அதே வழியில் திரும்பி வாடிவாசல் நோக்கி பாய்ந்தோடி வந்தது. அப்போது எதிரே வந்த காளை, மனோஜின் வீரா என்ற பெயர் கொண்ட காளை மீது நேருக்குநேர் மோதியது. இதில் மனோஜின் காளை அதே இடத்தில் மயங்கி விழுந்தது. 

ADVERTISEMENT

அதனையடுத்து கடந்த ஒரு வாரமாக அந்தக்காளைக்கு தம்மம்பட்டியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, சனிக்கிழமை உயிரிழந்தது. அதனையடுத்து செல்லமாகவும், அதிக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட காளை வீராவிற்கு, ஜல்லிக்கட்டு ரசிகர்கள் பலர் திரளாக வந்திருந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவர்களது மத முறைப்படி தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT