சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5,600 கனஅடியாகக் குறைந்தது

23rd Dec 2021 09:07 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 5,600 கனஅடியாகக் குறைந்தது.

மேட்டூா் அணையிலிருந்து நீா் மின்நிலையங்கள் வழியாக நொடிக்கு 5,000 கனஅடி நீரும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 600 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

அணையின் நீா்மட்டம் 120அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT