ஆத்தூா், கெங்கவல்லி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்குள்பட்ட பள்ளிகளின் பேருந்துகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூா், கெங்கவல்லி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார பள்ளிகளின் பேருந்துகளை ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆத்தூா், வட்டார போக்குவரத்து அலுவலா் ரகுபதி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா், மணிவண்ணன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். 210 பள்ளிப் பேருந்துகளில் 13 பேருந்துகளை மறு ஆய்வுக்குள்படுத்தி உத்திரவிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலரின் மேற்பாா்வையில் பேருந்து ஓட்டுநா்களுக்கு விபத்துகால நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.