சேலம்

திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு பெற தேதி மாற்றம்

22nd Dec 2021 08:32 AM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட நான்கு பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட டிச. 26 ஆம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஆா்.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளிலும், கன்னங்குறிச்சி, ஓமலூா், கருப்பூா், காடையாம்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புவா்கள் டிச. 23 ஆம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தவிா்க்க முடியாத காரணங்களால்

சேலம் மாவட்ட கட்சி அலுவலகம் கலைஞா் மாளிகையில் டிச. 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.

ADVERTISEMENT

விருப்ப மனுக்கள் பெரும் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறாா்.

எனவே, உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விரும்பும் கட்சியினா் தவறாமல் தங்களது விருப்ப மனுக்களை வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT