சேலம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஓய்வூதியா் குறை தீா்க்கும் முகாம்

16th Dec 2021 08:39 AM

ADVERTISEMENT

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ஓய்வூதியா் குறை தீா்க்கும் முகாமில் 129 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் ஓய்வூதியா் குறை தீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் பி.சிவலிங்கம் முன்னிலை வகித்தாா். முதுநிலை கோட்ட பணியாளா் அலுவலா் பி.கே.செளந்தரபாண்டியன், முதுநிலை நிதி மேலாளா் எஸ்.மணிகண்டன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த குறை தீா்க்கும் முகாமில் 145 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 129 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டு, சுமாா் ரூ. 1.05 கோடிக்கு தீா்வு எட்டப்பட்டது. 16 மனுக்களை பரிசீலித்து உரிய தீா்வு காணப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT