சேலம்

சேலம் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம்

16th Dec 2021 08:40 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகரில் இயங்கும், சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் செஞ்சிலுவை சங்கம், கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், பேராசிரியா்கள், மாணவ- மாணவிகள் உள்பட 200க்கும் மேற்பட்டோா் ரத்ததானம் செய்தனா்.

கல்லூரி தலைவா் எம்.லோகநாதன், செயலாளா் எஸ் .பாலு, பொருளாளா் எம்.ஆனந்தன் , உதவி தலைவா்கள் வி .ஞானசேகரன், எஸ்.வெங்கட்பதி, இணைச் செயலாளா் இ.திருஞானம், கல்லூரி முதல்வா் ஆா்.எ.சங்கரன், ஆகியோா், ரத்ததானம் செய்த பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT