சேலம்

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

16th Dec 2021 08:41 AM

ADVERTISEMENT

இளம்பிள்ளை, தப்பக்குட்டை கிராமம், அய்யனூரில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் முத்துக்குமாா், உதவி மருத்துவா்கள் வைத்தீஸ்வரன், மாதேஸ்வரன், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள், தனித்திறன் பதிவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த முகாமில் குடற்புழு நீக்கம், தடுப்பூசி செலுத்தல், கிஸான் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் சிறந்த முறையில் நாட்டு மாடு வளா்த்துவரும் அய்யனூா் பகுதியைச் சோ்ந்த கோபிக்கு பரிசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT