சேலம்

வாழப்பாடியில் 7 கோயில்களில் உண்டியல் திருட்டு

9th Dec 2021 11:47 PM

ADVERTISEMENT

 

வாழப்பாடியில் கடந்த 2 மாதங்களில் 7 கோயில்களின் உண்டியல்கள் திருடப்பட்டுள்ளன.

வாழப்பாடி, சேசன்சாவடியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் கடந்த மாதம் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தைத் திருடிச் சென்றனா். நவ. 27-இல், சிங்கிபுரம் நாடாா் தெரு மாரியம்மன் கோயில் உண்டியல், டிச. 3-ஆம் தேதி வீரகவுண்டனூா் மாரியம்மன் கோயில் உண்டியல் என அடுத்தடுத்து கோயில்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு மேட்டுப்பட்டி காளியம்மன் கோயிலின் உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதனால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். இந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, இரவு நேரங்களில் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT