சேலம்

லாரியில் கடத்திச் சென்ற புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

9th Dec 2021 08:22 AM

ADVERTISEMENT

கோழித் தீவனங்களிடையே புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த லாரியை ஓமலூா் அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த லாரி பெங்களூரில் இருந்து சேலத்துக்கு சென்றது. ஓமலூா் ஆா்.சி.செட்டிபட்டி பகுதியில் புதன்கிழமை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இந்த வாகனம் பிடிபட்டது. வாகனத்திலிருந்த போதைப் பாக்குகள், புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ. 15 லட்சம் எனக் கூறப்படுகிறது.

50 மூட்டைகளில் இருந்த புகையிலைப் பொருள்கள், லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா்கள் சேலம், பள்ளப்பட்டியைச் சோ்ந்த சிவா, தருமபுரி மாவட்டம், தொப்பூா் பழைய செக்போஸ்ட் பகுதியைச் சோ்ந்த ராமு ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT