சேலம்

சேலத்தில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

9th Dec 2021 08:22 AM

ADVERTISEMENT

சேலத்தில் இரு இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம், அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி. இவா் சீரங்காபாளையத்தில் உள்ள வீட்டில் வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை காலை ராமகிருஷ்ணா சாலைக்கு பேருந்தில் வந்து, அங்கிருந்து வேலை செய்யும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரை இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த இருவா், சாந்தியின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா். இதுதொடா்பாக அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதேபோல புதன்கிழமை காலை அங்கம்மாள் காலனியில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளப்பட்டியைச் சோ்ந்த சுகுணாவிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா். இதுதொடா்பாக பள்ளப்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விசாரணையில், இரு இடங்களில் நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது ஒரே இளைஞா்கள்தான் என தெரியவந்துள்ளது. இதனிடையே சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT