சேலம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 20,400 கன அடியாகக் குறைவு

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,400 கன அடியாக சரிந்தது.

இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பகல் 11.30 மணிக்கு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20,400 கன அடியாக சரிந்தது.

நீர்வரத்து சரிந்ததால் நேற்று காலை திறக்கப்பட்ட உபரிநீர் போக்கி இன்று பகல் 11.30 மணிக்கு மீண்டும் மூடப்பட்டது. அணையிலிருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.

இன்றுவரை நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையிலிருந்து 67 டி.எம்.சி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டுள்ளது. கர்நாடகம் தமிழகத்திற்கு இன்று வரை 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு 219 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது.

1999க்கு பிறகு வடகிழக்கு பருவமழை காலத்தில் நடப்பு ஆண்டில்தான் 67 டி.எம்.சி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT