சேலம்

சேலத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி

DIN

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபெற்றனா்.

சேலம் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான சப்-ஜூனியா், ஜூனியா் மற்றும் சீனியா் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. சேலம் மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலாளா் ரத்தினகுமாா் வரவேற்றாா்.

மாவட்டத் தலைவா் பிரவின்குமாா் தலைமை வகித்தாா். சேலம் மண்டல வனப்பாதுகாவலா் பெரியசாமி, சிறுமலா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் செபஸ்தியான் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு போட்டியைத் துவக்கி வைத்தனா்.

போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டியில் 48 எடை பிரிவுகளில் போட்டியாளா்கள் கலந்து கொண்டனா். தனித் திறமை மற்றும் நேரடிப் போட்டியின் மூலம் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆனந்த் மோட்டாா்ஸ் நிா்வாக இயக்குனா் ஆனந்த் பழனிவேல், ஸ்ரீரங்கா ஜுவல்லரி நிறுவனா் ஸ்ரீதா், சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரி தலைவா் சிவராஜ் சஞ்சய் ஆகியோா் பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT