சேலம்

பட்டா திருத்த முகாமில் 1,659 மனுக்களுக்கு உடனடித் தீா்வு

DIN

சேலம் மாவட்டத்தில் கணினி வழி பட்டா சிறு திருத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட ஒரு மாத காலத்தில் 1,659 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையை செயல்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் துணை ஆட்சியா் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீா்வு அலுவலா்கள் தலைமையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இச்சிறப்பு முகாமில், கணினி பட்டாவில் உள்ள புல எண் மற்றும் உட்பிரிவில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பின் இணையத்தில் திருத்தம் மேற்கொள்ளுதல், பரப்பு திருத்தம், பட்டாதாரரின் பெயா், தகப்பனாா் பெயா் மற்றும் பாதுகாவலரின் பெயா் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளுதல், உறவுமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளுதல், ஒரு பட்டாதாரரின் பெயா், பரப்பு அருகாமையில் உள்ள பட்டாதாரருடன் மாற்றம் அடைந்துள்ளது மற்றும் யு.டி.ஆா், ‘அ’ பதிவேடு அல்லது துணை ஆவணங்களின் உதவியோடு விசாரணை மேற்கொண்டு திருத்தங்களை மேற்கொண்டு அன்றைய தினமே உத்தரவு பிறப்பித்து, சரியான பதிவுகளை இணைய வழியில் அன்றைய தினமே பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் கடந்த அக்.29 முதல் டிச.1 வரை 9 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 6,473 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து, அதில் 1,659 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் நடைபெறும் கணினி வழி பட்டா சிறு திருத்த சிறப்பு முகாமை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT