சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் ரூ.17.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் கூட்டுறவு ஏலமையத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.17 லட்சத்து 50 ஆயிரத்திற்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

வாரம் தோறும் சனிக்கிழமை அன்று இம்மையத்தில் பருத்தி, நிலக்கடலை, எள் உள்ளிட்ட விளைபொருட்களுக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, பெரம்பலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனா். சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் விற்பனைக்கு வந்திருந்து பருத்தி மூட்டைகள் 225 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவுத்துறை அலுவலா் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டன. இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ.7,000 முதல் ரூ.9,135 வரையிலும் டி.சி.ஹெச் ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ.9,760 முதல் ரூ.13,699 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.17.50 லட்சம் மதிப்பிலான பருத்தி வா்த்தகம் நடைபெற்ாக கூட்டுறவுத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

பெரும் முதலாளிகளின் கருவி மோடி: ராகுல் விமர்சனம்

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

SCROLL FOR NEXT