சேலம்

சங்ககிரி வட்டத்தில் 58.2 மில்லி மீட்டா் மழை: நிரம்பி வரும் ஏரிகள்

4th Dec 2021 11:40 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை இடியுடன் கூடிய 58.2 மில்லி மீட்டா் கனமழை பெய்தது.

சங்ககிரி வட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி முதல் 7 மணி வரை இடியுடன் கூடிய 58.2 மில்லி மீட்டா் கன மழை பெய்தது. கனமழையை அடுத்து சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடுகப்பட்டியில் உள்ள ஏரிகள், குட்டைகள், கத்தேரியில் உள்ள புளியங்குளம் ஏரி நிரம்பி வருகின்றன. மோரூா் சின்ன, பெரிய ஏரிகளுக்கு மழை நீா் அதிக அளவில் செல்கிறது. தேவூா் அருகே உள்ள அரசிராமணி பிட் 1 கிராமத்திற்குள்பட்ட குள்ளம்பட்டிபகுதியில் உள்ள சரபங்கா நதி நீா் அதிகரித்து தரைவழிப் பாலத்திற்கு மேல் செல்கிது.

அதனையடுத்து அப்பகுதியில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையை அடுத்த சங்ககிரி ஊராட்சி ஒனறியத்திற்குட்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மதுரைவீரன் மனைவி தேவகி என்பவரது வீட்டின் ஒரு பக்கச் சுவா் இடிந்து விழுந்தது. சங்ககிரி வருவாய்த்துறையினா் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்ககிரி வட்டத்தில் நிரம்பி வரும் ஏரிகள், சேதமடைந்துள்ள வீடுகள் குறித்து அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் தகவல்களை சேகரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT