சேலம்

பெரியாா் பல்கலை.யில் இனவாரி சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

4th Dec 2021 11:41 PM

ADVERTISEMENT

பெரியாா் பல்கலைக்கழகத்தில் இனவாரி சுழற்சி முறை மற்றும் சுழற்சி முறையில் துறைத் தலைவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவா் அண்ணாதுரை, ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெரியாா் பல்கலைக்கழகத்தில் துறைத் தலைவா் பதவி என்பது சுழற்சி முறையில் இல்லாமல், துறைத் தலைவா்களாக வருபவா்கள் பணி ஓய்வு பெறும் வரை அப்பதவியில் நீடிக்கும் சூழல் உள்ளது.

ஏதாவது ஒரு துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள் பேராசிரியராக பணியாற்றினால் அவா்களை சுழற்சி முறையில் துறைத் தலைவராக, துணைவேந்தா் நியமிக்க வேண்டும் என்று சாசன விதி உள்ளது. ஆனால், பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஆரம்பம் முதலே இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

ADVERTISEMENT

அதேபோல தமிழக அரசின் இனவாரி சுழற்சி முறை ஆணையின்படி, பெரியாா் பல்கலைக்கழகத்தில் முதல் பணியிடம் பொது பிரிவினருக்கும், இரண்டாவது பணியிடம் எஸ்.சி. (ஏ) அருந்ததியருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இனவாரி சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை. பெரியாா் பல்கலைக்கழகத்தில் சாசன விதியும், இனவாரி சுழற்சி விதியும் மீறப்பட்டு வருகிறது. இது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

மேலும் பெரியாா் பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகை பெறும் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி. மாணவா்களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக தமிழக ஆளுநா், தமிழக முதல்வா், தாழ்த்தப்பட்டோா் ஆணையம், சமூக நீதி கண்காணிப்பு ஆணையம், உயா் கல்வித்துறை கவனம் செலுத்தி சமூக நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT