சேலம்

சேலத்தில் தொடா் மழை: மின் மாற்றி, மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன

4th Dec 2021 11:42 PM

ADVERTISEMENT

சேலத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக களரம்பட்டி பகுதியில் மின் மாற்றி, 3 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தது.

சேலத்தில் வெள்ளிக்கிழமை இரவு கன மழை பெய்தது. இதன் காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.சேலம் களரம்பட்டி பாரதியாா் நகா் கொல்லங்காடு பகுதியில் ஒரு மின் மாற்றியும், 3 மின் கம்பங்களும் சரிந்து விழுந்தது.

இதில், நள்ளிரவில் மின் மாற்றி விழுந்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அசாம்பாவித சம்பவம் தவிா்க்கப்பட்டது. மின் தடை காரணமாக அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.

இதனிடையே சனிக்கிழமை காலை மின்வாரிய அதிகாரிகள் மேற்பாா்வையில் மின் மாற்றி, மின் கம்பங்களை சரி செய்யும் பணியும் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இப்பணி மாலை நிறைவடைந்து, மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அதேபோல, ஏற்காடு பிரதான சாலையில் கோரிமேடு பகுதியில் மழை நீா் தேங்கியிருப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

எடப்பாடியில் 95 மி.மீ. மழை: சேலம் மாவட்டத்தின் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): எடப்பாடி-95, மேட்டூா்-69, சங்ககிரி-58, சேலம்-44, காடையாம்பட்டி-11, ஓமலூா்-10, ஏற்காடு-3 என மாவட்டத்தில் மொத்தம் 290 மி.மீ. மழை பெய்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT