சேலம்

சூரமங்கலம் பகுதியில் குற்றங்களைத் தடுக்க 207 சி.சி.டி.வி. கேமராக்கள் இயக்கி வைப்பு

4th Dec 2021 11:42 PM

ADVERTISEMENT

சேலம் சூரமங்கலம் பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் 207 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன.

சேலம் சூரமங்கலம் மேற்கு சரகத்திற்கு உட்பட்ட சூரமங்கலம், நரசோதிப்பட்டி, ஸ்டேட் வங்கி காலனி, சேலத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்பேரில் சூரமங்கலம் பகுதியில் 207 கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா கலந்து கொண்டு கேமராக்களை இயக்கி வைத்து பேசுகையில், ‘சேலம் நகரத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மாநகரில் கடந்த 10 நாட்களில் திருடு போன சுமாா் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். சேலம் நகர பகுதியில் தொடா்ந்து சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் துணை ஆணையா்கள் மோகன்ராஜ், மாடசாமி, உதவி ஆணையா் நாகராஜன், காவல் ஆய்வாளா் சிவகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT