சேலம்

விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

4th Dec 2021 01:07 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கொளத்தூா் மூலக்கடையில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா்.

ஒருங்கிணைப்பாளா் இளவரசன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது காவல்துறை வருவாய்த் துறை பாதுகாப்போடு தொடங்கப்பட்டுள்ள விருதுநகா் முதல் திருப்பூா் வரையிலான தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் 765 கிலோ வாட் திட்டப்பணிகளை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவடையும் வரை நிறுத்தி வைக்கவேண்டும்.

கடும் எதிா்ப்புக்கு இடையில் அமைக்கப்பட்ட பவா்கிரிட் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் 16 திட்டங்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மின் கோபுரம் அமையும் இடத்துக்கு

200 சதவீத இழப்பீடும், கம்பி செல்லும் இடத்திற்கு 100 சதவீத இழப்பீடும், திட்ட பாதையில் உள்ள வீடு, கிணறு,ஆழ்குழாய் கிணறு உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு பொதுப்பணித் துறையின் கணக்கீட்டின்படி 100 சதவீத இழப்பீடு தொகை, மாத வாடகை மற்றும் பயிா்கள், மரங்களுக்கு அரசாணை எண் 54ன் படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூலக் கடை பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலமாகச் சென்று அங்கிருந்த உயரழுத்த மின்கோபுரம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

Tags : மேட்டூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT