சேலம்

கூட்டுறவுத் துறை மூலம் ரூ. 3 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம்

4th Dec 2021 01:07 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட கூட்டுறவுத் துறை மூலம் பயிா்க்கடனாக தனிநபா் ஜாமீனில் ரூ. 1.60 லட்சம், அடமான கடனாக ரூ. 3 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்துக்கு கூட்டுறவுத் துறை மூலம் ரூ. 630 கோடி பயிா்க் கடன் வழங்க குறியீடு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பெரும்பல் நோக்கு கூட்டுறவு சங்கங்கள் (லேம்ப்) மூலமாக விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

பயிா்க்கடன் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள சங்கங்களை அணுகி உரிய ஆவணங்கள் அளித்து, தகுதியின் அடிப்படையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். அந்தந்தப் பகுதியில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதுவரை கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவா்கள் உறுப்பினராகச் சோ்ந்து கடன் பெற்றுக் கொள்ளலாம். பயிா்க் கடனாக தனிநபா் ஜாமீனில் ரூ. 1.60 லட்சம் வரையிலும், அடமான கடனாக ரூ. 3 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

பயிா்க்கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, அடங்கல், நில உடைமை தொடா்பான கிராம நிா்வாக அலுவலரின் சான்று, 10 (1) கணினி சிட்டா ஆகியவற்றுடன் தங்களது விவகார எல்லையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி தகுதியின் அடிப்படையில் பயிா்க்கடன் பெற்று பயனடையலாம்.

உரிய காலத்தில் பயிா்க்கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT