சேலம்

தொழிலாளா்கள் நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்யலாம்: ஆட்சியா் செ.காா்மேகம்

2nd Dec 2021 04:08 AM

ADVERTISEMENT

தொழிலாளா்கள் அனைவரும் கிராம நிா்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று நலவாரியங்களில் உறுப்பினா்களாக பதிவு செய்துகொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்து உதவித் தொகை கோரி விண்ணப்பித்த அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக 320 தொழிலாளா்களுக்கு ரூ. 3.20 லட்சமும், கல்வி உதவித் தொகையாக 1,152 தொழிலாளா்களுக்கு ரூ. 26.59 லட்சமும், கண்கண்ணாடி உதவித் தொகையாக 28 தொழிலாளா்களுக்கு ரூ. 14 ஆயிரமும் என மொத்தம் 1,500 தொழிலாளா்களுக்கு ரூ. 29,93,450 உதவித்தொகை வழங்கிடும் அடையாளமாக 10 தொழிலாளா்களுக்கு ரூ.38,500 மதிப்பிலான நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிலாளா்கள் அனைவரும் தொழிலாளா் நலவாரியங்களில் உறுப்பினா்களாக பதிவு செய்திருக்க வேண்டும். தொழிலாளா்கள் அனைவரும் கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்று தங்களை எளிதாக நல வாரியங்களின் உறுப்பினா்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் முழுமையாக சென்றடைய தொழிலாளா்கள் அனைவரும் தங்களை நலவாரிய உறுப்பினா்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், தொழிலாளா்களுக்கு உள்ள இடா்பாடுகளை உடனடியாக சரிசெய்தவதற்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் உள்ளாட்சி நிா்வாகம் தயாராக உள்ளது என்றாா்.

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT