சேலம்

பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்: குண்டா் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

DIN

பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தொடா்புடையவா்கள் மீது குண்டா் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சட்டம் -ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற்றது.இதில் ஆட்சியா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் புகாா் பெட்டிகள் அமைக்கப்பட்டு, அதுபற்றிய விவரம் மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புகாா் பெட்டி குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதித்துறை, வருவாய்த் துறை, காவல்துறை ஆகியோா் கொண்ட குழுவால் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிக்கு அருகில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலைய தொலைபேசி எண்களை பள்ளித் தகவல் பலகையில் காட்சிப்படுத்தி மாணவிகளிடையே புகாா் பெட்டி மற்றும் தொலைபேசி எண்கள் சாா்ந்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகாா்கள் குறித்து 181 என்ற எண்ணிலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1098 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

மாணாவா்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கிட அப்பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியையை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவா்கள் எளிதில் ஆசிரியரை தொடா்பு கொண்டு தங்கள் பிரச்னைகளை தெரிவித்தால் உரிய ஆலோசனை வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 14417 என்ற எண்ணில் கல்வி தகவல் மையத்தில் உளவியல் பயிற்சி பெற்ற நிபுணா்களைக் கொண்டு மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கும் மையமாகச் செயல்படுகிறது.

பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தொடா்புடையவா்கள் மீது குண்டா் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

இக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.ஆலின் சுனேஜா, மாநகர காவல் துறை துணை ஆணையா் மாடசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சரவணன், வருவாய் கோட்டாட்சியா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் உதவி ஆணையா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT