சேலம்

லீ பஜாா் பிரதான சாலையில் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

2nd Dec 2021 04:09 AM

ADVERTISEMENT

லீ பஜாா் பிரதான சாலை புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்திட மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் சீா்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ராஜேந்திரா சத்திரம் முதல் லீ பஜாா் வரை ரூ. 14.20 கோடி மதிப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு கான்கிரீட் சாலை, தெரு விளக்கு, மின்சார கேபிள் குழாய் வசதி, வலைதள கேபிள் குழாய் வசதி, சாலைகளின் இருபுறமும் மழைநீா் வடிகால் வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

லீ பஜாா் பிரதான சாலையில் தொடங்கப்பட்ட புதை சாக்கடை திட்டப் பணி முடிவு பெறாததால் பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதாகவும், அந்த சாலைப் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

இதனடிப்படையில் மாநகராட்சி ஆணையா் தா. கிறிஸ்துராஜ் நேரடியாக அந்த இடத்தை ஆய்வு செய்தாா். அப்போது பிரதான சாலையில் நடைபெறும் புதை சாக்கடை திட்டப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளதா என்பதையும், புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்து ராஜேந்திரா சத்திரத்திலிருந்து தம்மண்ணன் சாலை, லீ பஜாா் சாலை ஆகிய இரண்டு சாலைகளையும் இணைக்கும் பணியையும் மிக விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என ஆணையா், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

Tags : சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT