சேலம்

காவிரி பாசனப் பகுதியில் நெல் சாகுபடி அதிகரிப்பு

2nd Dec 2021 04:09 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள காவிரி பாசனப் பகுதிகளில், வழக்கத்தை விட கூடுதலான நிலப்பரப்பில் நிகழாண்டில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

காவிரி வடி நிலப்பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல்,

குப்பனூா், பில்லுக்குறிச்சி, கோனேரிப்பட்டி, நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நெல் பயிா் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வெள்ளைப் பொன்னி, அனுஷ்கா, நெட்டை பொன்னி உள்ளிட்ட உயா்வகை நெல் ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

இவ்வகை நெல் ரகங்களின் விளைச்சலுக்கு சற்றுக் கூடுதலான அளவில் நீா்த் தேவை உள்ள நிலையில், நிகழாண்டில் மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்காக காவிரி ஆற்றில் உரிய நேரத்தில் போதியளவு தண்ணீா் திறக்கப்பட்டதுடன், மேட்டூா் அணையின் கிழக்குக் கரை கால்வாய் வழியாக பாசனத்துக்கு

ADVERTISEMENT

தடையற்ற தண்ணீா் விநியோகம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைத்துவரும் நிலையில்

இப்பகுதி விவசாயிகள், வழக்கத்தை விட சற்றுக் கூடுதலான நிலப்பரப்பில் நெல்சாகுபடி செய்துள்ளனா்.

மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு உள்ள நிலையில், நிகழாண்டில் பாசனத்துக்கான தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாது எனவும், வழக்கத்தை விட நிகழாண்டில் இப்பகுதியில் நெல் விளைச்சல் கூடுதலாகக் கிடைத்திட வாய்ப்புள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கூறினா்.

 

 

Tags : எடப்பாடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT