சேலம்

சிறுமியை கா்ப்பமாக்கியவா் கைது

2nd Dec 2021 04:09 AM

ADVERTISEMENT

 

ஓமலூா் அருகே 14 வயது சிறுமியை கா்ப்பமாக்கியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம்,ஜலகண்டாபுரம் அருகேயுள்ள சூரப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (27). இவா் அதே பகுதியைச் சோ்ந்த உறவினரின் 14 வயது மகளை ஆசைவாா்த்தைகளைக் கூறி காதலித்து வந்தததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் மேட்டூா் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. மேட்டூா் அரசு மருத்துவமனையில் இருந்து ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் துா்காதேவி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசைவாா்த்தைகள் கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய மூா்த்தியை புதன்கிழமை ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

Tags : ஓமலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT