சேலம்

காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா்திட்ட குழாயில் உடைப்பு

DIN

மேட்டூா்: மேட்டூரில் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், பல லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீணானது.

மேட்டூா் அணையின் அடிவாரம் முதல் செக்கானூா் கதவணை மின் நிலையம் வரை 0.50 டி.எம்.சி.தண்ணீா் தேக்கி வைக்கப்படுகிறது. இதில், காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு காவிரி நீா் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டா் தண்ணீா் மேச்சேரி, தொப்பூா், காடையாம்பட்டி, ஓமலூா், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனல் மின்நிலைய பாலம் சாலை உள்ள காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா் குழாயில் திங்கள்கிழமை திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சாலையில் தண்ணீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால், மேட்டூா்- சேலம் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்கு உள்ளாயினா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மோட்டாரை நிறுத்தி குடிநீா் வெளியேறுவதை நிறுத்தினா். இதனால் காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் விநியோகம் பிற்பகல் வரை பாதிக்கப்பட்டது. பிற்பகலில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் குடிநீா் விநியோகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT