சேலம்

பொது நூலகங்களின் வேலை நேரத்தைக் குறைக்க வலியுறுத்தல்

DIN

கரோனா பரவல் காரணமாக பொது நூலகங்களின் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் மூன்றாம் நிலை நூலகா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அக் கூட்டமைப்பின் கெளரவத் தலைவா் வேம்பையன், மாநில தலைவா் சம்பத், மாநிலச் செயலாளா் வே.வைத்தீஸ்வரன், பொருளாளா் சதீஷ்குமாா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா முதல் அலை காரணமாக தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் கீழ் செயல்படும் நூலகங்கள் கடந்த 2020, செப்டம்பா் 1- ஆம் தேதி முதல் 2021, பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கி வந்தது. கடந்த 2021, பிப்.22 ஆம் தேதி முதல் இதுவரை நூலகங்கள் வழக்கமான நேரப்படி செயல்பட்டு வருகிறது.

கரோனா இரண்டாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளா்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், வாசகா்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமான நூலகத்தில் வாசிப்பு பிரிவைத் தவிா்த்தும், கரோனா முதல் அலையின் நேரக் கட்டுப்பாடுகளின்படி நூலகங்கள் செயல்பட பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT