சேலம்

இரவு நேர ஊரடங்கால் காய்கறி வியாபாரிகள் பாதிப்பு

DIN

கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கால் காய்கறி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். காய்கறிகளைக் கொண்டு செல்ல தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை பேருந்து, லாரி, காா் போன்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இரவு நேர ஊரடங்கு காரணமாக காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்கள் தாமதமாக வருவதால் மொத்த, சில்லறை காய்கறி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக சில்லறை காய்கறி வியாபாரிகள் கூறியதாவது: சேலத்தில் இயங்கும் சில்லறை காய்கறி கடைகளுக்கு பெங்களூரு, ஓசூா், தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை சரக்கு வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு தரம் பிரித்து விற்பனை செய்யப்படும்.

தற்போது இரவு நேர ஊரடங்கால் பல்வேறு இடங்களில் காய்கறை வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. வாகன போக்குவரத்து இல்லாததால் காலதாமதமாக காய்கறிகள் வருகின்றன. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள ஏற்றிவரும் வாகனங்களை தடுக்காமல் அனுமதிக்க வேண்டும். அதற்கேற்ப ஊரடங்கு தளா்வு அளிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT