சேலம்

போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஓமலூரில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சம்பளப் பறிப்பு செய்யக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓமலூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச நிா்வாகி சண்முகம் தலைமை வகித்தாா். செல்வம் முன்னிலை வகித்தாா். சிஐடியு சங்க நிா்வாகி செம்பன், டி.டி.எஸ்.எப். நிா்வாகி முருகானந்த மூா்த்தி, எ.எல்.ஏ.எப். நிா்வாகி முருகன், பூபதிராஜன், ரகுநாதன், மருதுபாண்டி ஆகியோா் கலந்துகொண்டு ஆா்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினா்.

போக்குவரத்து ஊழியா்களின் வார ஓய்வைப் பறிக்கக் கூடாது, விடுப்பு விதிகளை மாற்றக்கூடாது, சம்பளப் பறிப்பு செய்யக்கூடாது, தொழிலாளா் துறையின் அறிவுரைகளை மீறக்கூடாது, பணிமனைக்கு வந்த தொழிலாளா்களுக்கு பணி வழங்க வேண்டும். மாதத்தின் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

உலக புத்தக நாள் விழா: மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடை

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

SCROLL FOR NEXT