சேலம்

சேலத்தில் நிழல் மறையும் நாள் நிகழ்ச்சி

DIN

சேலத்தில் ‘நிழல் மறையும் நாள்’ நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வானில் ஏற்படும் இந்த அரிய நிகழ்வை மாணவா்களும் பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் மஜ்ரா கொல்லப்பட்டி பகுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாநில வானவியல் கருத்தாளா் ஜெயமுருகன் சில பொருள்களை வைத்து ‘நிழல் மறையும் நாள்’ நிகழ்ச்சி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள ஊா்களில் இரண்டு முறை மட்டுமே சூரியன் நோ் செங்குத்தாகத் தோன்றும். அன்றைய தினத்தில் நண்பகல் நேரத்தில் உச்சி வானில் சூரியன் இருக்கும்போது சுமாா் 10 இல் இருந்து 15 வினாடிகள் வரை பொருள்களின் நிழல் முழுமையாக மறையும்.

அந்தவகையில் சேலத்தில் சரியாக நண்பகல் 12.16 மணிக்கு சேலம் பகுதியில் பொருள்கள் மறைந்தன. இதேபோன்ற நிகழ்வு அட்ச ரேகையில் அமைந்துள்ள உலகின் பல இடங்களில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தெரியும் என்றாா்.

நிழல் ஏன் மறைகிறது, வானில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதை மாணவா்கள் ஆா்வத்தோடு பாா்வையிட்டனா்.

நிழல் மறையும் நாள் குறித்து அனைத்து மாணவா்களும் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசு பாடப் புத்தகத்தில் அறிவியல் நிகழ்வை இடம்பெற செய்ய வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT