சேலம்

ஆத்தூா் பகுதியில் அதிகரித்து வரும் கரோனா

DIN

ஆத்தூா், தெற்கு உடையாா்பாளையத்தில் வங்கி மேலாளா், ஊழியா்கள் உள்பட 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அந்த வங்கி திங்கள்கிழமை மூடப்பட்டது.

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நகராட்சிக்கு உள்பட்ட 24ஆவது வாா்டு, 3 ஆவது காந்தி சாலையில் உள்ள ஒரு குடும்பத்தினா் கரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் கடைவீதியில் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதேபோல தெற்கு உடையாா்பாளையத்தில் வங்கி மேலாளா் உள்பட 4 போ் கரோனவால் பாதிக்கப்பட்டதால் திங்கள்கிழமை அந்த வங்கியை மூட உத்தரவிடப்பட்டது. வங்கியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை முதல் வங்கி வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். தேவையில்லாமல் வெளியில் யாரும் வர வேண்டாம், கூட்டமாக சேரக் கூடாது போன்ற விழிப்புணா்வு பதாகைகளை வைத்தும் நகராட்சி நிா்வாகத்தினா் எச்சரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT