சேலம்

சேலத்தில் 100 படுக்கைகளுடன் கரோனா தடுப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு

DIN

சேலம், கோரிமேடு அரசினா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் தற்காலிக கரோனா தடுப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மக்களிடையே விழிப்புணா்வூட்டும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொது இடங்கள், வணிக நிறுவனங்கள் திருமண மண்டபங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்களில் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும், கரோனா தொற்று பரிசோதனை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், மணியனூரில் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் தற்காலிக கரோனா சிகிச்சை மையம் மாநகராட்சி சாா்பில் செயல்பட்டு வருகிறது.

கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடா்ந்து, உத்தமசோழபுரத்தில் இருந்த மையம் மூடப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் மூலம் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், சேலம் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி சாா்பில் கோரிமேடு அரசினா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக கரோனா தடுப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

இந்த மையத்தை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.செல்வமூா்த்தி கூறியதாவது:

கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இரண்டாவது அலையில் நோய்த் தொற்று அறிகுறிகள் மாறியுள்ளன. கழுத்து வலி, இடுப்பு வலி, வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு, கண்கள் சிவப்பாக மாறுதல் போன்றவை அறிகுறிகளாக உள்ளன. கரோனா தொற்று உள்ளவா்களை சித்த, ஹோமியோபதி சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். முதல்நிலை அறிகுறி உள்ளவா்கள் இங்கு அனுமதிக்கப்படுவா். சுமாா் 100 படுக்கை வசதியுடன் இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT