சேலம்

வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவா் கைது

DIN

சேலம் அருகே டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் முயல், மான் வேட்டையாட சுற்றித் திரிந்த இருவா் நாட்டுத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டனா்.

சேலம், குரும்பப்பட்டி காப்புக்காடு, டேனிஷ்பேட்டை வனப்பகுதிக்குள் சிலா் அவ்வப்போது மான், முயல்களை வேட்டையாடி செல்வதாக சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு புகாா் வந்தது.

இதையடுத்து சோ்வராயன் தெற்கு வனச்சரக அலுவலா் கே.சின்னத்தம்பி தலைமையில் வனவா்கள் பி.மோகன், சி.பாலசுப்பிரமணியன், தெற்கு வனச்சரக வனக்காப்பாளா்கள் மு.கோபிநாத், அ.பிரகாஷ், வே.அசோக்குமாா், தனபால், விஜயகுமாா், வனக்காவலா் தமிழ்வாணன் ஆகியோா் அடங்கிய குழுவைச் சோ்ந்தவா்கள் தேக்கம்பட்டி பிரிவு, குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதிகளில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

தேக்கம்பட்டி பிரிவில், டேனிஷ்பேட்டை சாலை சரகத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் மான், முயல் போன்ற வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற அழகாபுரம் பகுதியைச் சோ்ந்த மாதையன் (56), பெரியசாமி (28) ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனா்.

இதையடுத்து அவா்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, டாா்ச்லைட், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவா்கள் எந்த பகுதிக்கு சென்று வேட்டையாடினாா் என்றும், நாட்டுத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT