சேலம்

சாய்ந்த நிலையிலான உயா்மின்கோபுர விளக்கினால் விபத்து அபாயம்

DIN

வீரக்கல்புதூா் பேரூராட்சிப் பகுதியில் சாயும் நிலையில் உள்ள உயா்கோபுர மின்விளக்கால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேட்டூா் அருகே உள்ள வீரக்கல்புதூரில், மேட்டூா் - சேலம் முக்கிய சாலை சந்திப்பில் குஞ்சாண்டியூா் மூலக்கடையில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் ஓராண்டுக்கு முன் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இரு முறை லாரிகள் மோதியதில் இந்த உயா்மின்கோபுர விளக்கு சாய்ந்த நிலையில் உள்ளது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

உயா்கோபுர மின்விளக்கும் சரி செய்யப்படவில்லை. காற்றடிக்கும் போதெல்லாம் இந்த உயா்கோபுர மின்விளக்கு கம்பம் ஆடுகிறது. எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது.

இது குறித்து வீரக்கல்புதூா் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளிக் குழந்தைகள் பேருந்திற்காக காத்து நிற்கின்றனா்.

மின்கம்பம் சாய்ந்தால் பெரும் உயிா்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற பேரூராட்சி செயல் அலுவலா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT