சேலம்

கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில் விற்பனை சரிவு

DIN

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில், அண்மைக் காலமாக விற்பனையில் சரிவு ஏற்பட்டு வருவதாக , கால்நடைவியாபாரிகள் தெரிவித்தனா்.

இந்த கால்நடைச் சந்தையில், கால்நடைகள், காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் விற்பனையாவது வழக்கம். இச்சந்தையில், அதிக எண்ணிக்கையில் ஆடு, மாடுகள், கோழிகள், பந்தைய புறாக்கள், கறவைமாடுகள், உழவுப் பணிக்கான காளைமாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

குறிப்பாக இச்சந்தையில் அதிக எண்ணிக்கையில் சண்டை சேவல்கள், கால்நடைகள் விற்பனையாகி வருகின்றன. மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இச்சந்தைக்கு, தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வந்து வளா்ப்புக்கான கால்நடைகள், இறைச்சிக்கான கால்நடைகள், சண்டை சேவல்களை வாங்கிச் செல்கின்றனா்.

வாரந்தோறும் சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் தொடங்கப்படும் இக் கால்நடைச் சந்தையில், சுமாா் ரூ. 4 கோடி வரையில் வா்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், கரோனா தாக்கத்தால் நாடுமுழுவதும் கட்டுப்பாடு விதிமுறைகள், நோய்த் தொற்று குறித்த அச்சம், சட்டப்பேரவைத் தோ்தல், அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட பறவைக்காய்சல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், இச்சந்தைக்கு வரும் நுகா்வோா் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து போனது.

மேலும் பண்டிகைகள் அதிகம் இல்லாத நிலையிலும், நோய்த்தொற்று அச்சத்தால் மாநிலம் முழுவதும் இறைச்சிக்கான தேவை குறைந்துபோனதாலும், கொங்கணாபுரம் கால்நடைச் சந்தையில் வழக்கமாக நடைபெற்றுவந்த கால்நடைகளின் வா்த்தகம் பாதியாகக் குறைந்துள்ளதாக

வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். வரும் நாள்களில் கரோனா தொற்றின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் நிலையில், கொங்கணாபுரம் கால்நடைச்சந்தையில் கால்நடைகளின் வா்த்தகம் கேள்விக்குறியாகி விடும் எனவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி விடும் என்றும் கால்நடைவியாபாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT