சேலம்

மேட்டூா் அணை பூங்காவில் கரோனா தடுப்பு நடவடிக்கை

DIN

மேட்டூா் அணை பூங்காவில் கரோனா தடுப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மேட்டூா் அணை பூங்காவும் ஒன்று. சேலம் மாவட்டம் மட்டுமன்றி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கா்நாடக மாநிலத்தில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பாா்வையாளா்கள் மேட்டூா் அணை பூங்காவுக்கு வந்து செல்கின்றனா்.

கரோனா பரவலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனா்.

பூங்கா நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. பூங்கா நுழைவாயில், பொதுமக்கள் அமரும் இருக்கைகள், சுற்றுப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மேட்டூா் அணை பூங்கா பல மாதங்கள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT