சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 389 வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன் சொந்த ஊரான கத்தேரி ஊராட்சி, சடையம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தினாா். அதேபோல சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளா் கே.எம்.ராஜேஷ் தனது மனைவி ஆா்த்தியுடன் வந்து சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக்ததில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கினைச் செலுத்தினா்.