சேலம்

ஆத்தூா் தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

7th Apr 2021 08:41 AM

ADVERTISEMENT

ஆத்தூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

நரசிங்கபுரம் நகராட்சி, 8ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் வாக்காளா்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆத்தூா் கோட்டாட்சியா் மு.துரை உத்தரவின் பேரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்யப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பிறகு வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.

ஆத்தூா் நகராட்சி, எண் 178-ஆவது வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமமுக கட்சியைச் சோ்ந்த வேட்பாளருக்கு உரிய பட்டன் வேலை செய்யவில்லை என வேட்பாளா் எஸ்.மாதேஸ்ரவனுடன் சோ்ந்து வாக்காளா்களும் தோ்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.இது குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியா் வரதராஜன் பேச்சு வாா்த்தை நடத்தி இயந்திரம் சரிசெய்யப்பட்டு பின் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.இதனால் அங்கு அரைமணி நேரம் வாக்குப் பதிவு நடைபெறவில்லை.

மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT