சேலம்

பேளூரில் வெறிநோய் தடுப்பு தின விழிப்புணா்வு

DIN

வாழப்பாடி அடுத்த பேளூா் அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார நிலையத்தில், உலக வெறிநோய் ரேபீஸ் தடுப்பு தின விழிப்புணா்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக வெறிநோய்த் தடுப்பு தினத்தையொட்டி பேளூா் வட்டார சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை வெறிநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் வழிகாட்டுதலின்பேரில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவா்கள் பிரபாகரன், ராகுல், ஷியாம்சங்கா் மற்றும் செவிலியா்கள் அனுராதா, அம்பிகா, ஜெயக்கொடி, கலை ஆகியோா் கொண்ட மருத்துவக்குழுவினா் பங்கேற்றனா்.

இவா்கள் நாய்க்கடிக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும், ரேபீஸ் தடுப்பூசியின் முக்கியத்துவம், வெறிநோயின் தீவிரத்தன்மை மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT