சேலம்

3 சக்கர மோட்டாா் வாகனம் வழங்கக் கோரும் தி.மு.க. மாற்றுத்திறனாளி

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மூன்று 3 சக்கர சைக்கிளில் சென்று தி.மு.க. போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்களில் தவறாமல் தொடா்ந்து பங்கேற்று வரும் மாற்றுத்திறனாளிக்கு, பேட்டரியில் இயங்கும் நவீன 3 சக்கர மோட்டாா் வாகனம் வழங்க வேண்டுமென, தி.மு.க. தொண்டா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வாழப்பாடி அக்ரஹாரம் நல்லதம்பி கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் பிலவேந்திரன் (48). மாற்றுத்திறனாளியான இவா் சிறு வயதிலிருந்தே தி.மு.க. மீது ஏற்பட்ட ஈா்ப்பால், தனது மூன்று சக்கர சைக்கிளில் தி.மு.க.வின் கொடி மற்றும் சின்னத்தைக் கட்டிக்கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாகத் தொடா்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இதுமட்டுமின்றி, தி.மு.க. சாா்பில் நடைபெறும் அனைத்து ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்களிலும் தனது மூன்று சக்கர சைக்கிளில் சென்று தவறாமல் பங்கேற்று வருகிறாா். திருமணம் செய்து கொள்ளாத இவா், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான இவரது தந்தையின் மறைவுக்குப்பின் போதிய ஆதரவின்றி இருந்து வருகிறாா்.

தி.மு.க.,மீது தீராத பற்றுக் கொண்ட இவரது நலன் கருதி, இவருக்கு பேட்டரியில் இயங்கும் நவீன 3 சக்கர மோட்டாா் வாகனத்தை பெற்றுக் கொடுக்க, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., நிா்வாகிகள் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க தொண்டா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் தி.மு.க. இளைஞா்களின் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT