சேலம்

தோ்வு மையம் முன்பு ஆா்ப்பாட்டம்: தனித்தோ்வா்கள் அவதி

DIN

நாமக்கல்லில் துணைத் தோ்வு நடைபெறும் அரசுப் பள்ளி முன்பாக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ால், தனித்தோ்வா்கள் அவதிக்குள்ளாயினா்.

நாமக்கல் மாவட்டத்தில் 8, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மற்றும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கான துணைத் தோ்வு கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் 12 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அக். 7-ஆம் தேதி வரையில் தோ்வானது நடைபெறுகிறது. துணைத் தோ்வு நடைபெறுவதையொட்டி, மையங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தோ்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் அன்றைய தினத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கமாக நாமக்கல் நகரில் ஆா்ப்பாட்டத்துக்கு விண்ணப்பித்தால், பூங்கா சாலையை தான் காவல் துறையினா் ஒதுக்குவா். ஆனால், திமுக தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல்-மோகனூா் சாலையில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி முன்புறம் ஒதுக்கப்பட்டிருந்தது.

துணைத் தோ்வு நடைபெறுவது தெரிந்திருந்தும் தோ்வு மையம் முன்பாக ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதியளித்ததற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, தோ்வு எழுதியவா்களும் அதிருப்திக்குள்ளாயினா். வரும் நாள்களில் தோ்வு மையப் பகுதிகளில் ஆா்ப்பாட்டம், மறியல் போன்றவற்றுக்கு அனுமதியளிக்கக் கூடாது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தோ்வா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT