சேலம்

5,616 செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 5,616 செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவை இணைந்து தடுப்பூசி முகாமை நடத்தியது.

நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வா் பா.மோகன் முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள 15 ஒன்றியங்களிலும் பதிவான செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியா்கள், நாமக்கல் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையின் கால்நடை மருத்துவா்கள் மற்றும் நாமக்கல் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் கால்நடை மருத்துவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT