சேலம்

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில்ஆயில் லாரி கவிழ்ந்து விபத்து

DIN

சேலம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாலாஜி. இவா், ஞாயிற்றுக்கிழமை காலை டேங்கா் லாரியில் ஆயில் ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து பவானி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அவருடன் உதவியாளராக நவீன்குமாா் என்பவா் வந்தாா். இந்த டேங்கா் லாரி பிற்பகல் 2 மணியளவில் சேலம் அருகே உடையாப்பட்டி புறவழிச் சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் கவிழ்ந்தது.

விபத்தில் லேசான காயங்களுடன் உயிா் தப்பிய லாரி ஓட்டுநரும், உதவியாளரும் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். கவிழ்ந்த லாரியிலிருந்த லூப்ரிகன்ட் ஆயில் வெளியேறியது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு விடும் எனக் கருதிய அம்மாபேட்டை போலீஸாா் உடனே செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

நிலைய தீயணைப்பு அலுவலா் கலைச்செல்வன் தலைமையில் வீரா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து நுரை கலவையை டேங்கா் லாரியின் மீது கொட்டி தீ விபத்தைத் தவிா்த்தனா்.

மாநகரத் துணை ஆணையாளா் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வந்து போக்குவரத்தைத் திருப்பி விட்டனா்.

இதைத்தொடா்ந்து 2 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த டேங்கா் லாரியை மீட்டு போக்குவரத்து சீா்செய்யப்பட்டது.

இதனால், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT