சேலம்

வேலைக்குச் செல்ல புதிய நிபந்தனைகளுடன் இ-பாஸ்: கேரள அரசு அறிவிப்பு

DIN

கேரளாவில் வேலைக்கு இ பாஸ் மூலம் செல்ல புதிய நிபந்தனைகளை விதித்து, கேரள அரசு புதிய உத்தரவை கடந்த செப்.17 ல் வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலத்திற்கு வேலைக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கொவைட்19 ஜாக்ரதா போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கிடைத்து கேரளாவுக்குள் வரும் போது, அவரை அழைத்து வரும் ஒப்பந்ததாரர், தொழிலாளியை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும். பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வரும் தொழிலாளிக்கான சோதனை செலவுகளை ஒப்பந்ததாரரே ஏற்க வேண்டும்.

கரோனா தொற்று கண்டரியப்பட்டால் அவர் வேலை செய்ய அனுமதி இல்லை, நோய் தீரும் வரை தனிமையில் இருக்க வேண்டும். தொழில் நுட்ப பணியாளர்களும், கடைசியாக 96 மணி நேரத்திற்கும் குறையாமல் அவர்களை ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதித்த சான்றிதழை ஒப்படைத்து, ஒப்பந்ததாரர் அவரை பாதுகாக்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் தகவல் உடனடியாக தெரிவிக்க வேண்டும். வேலை செய்யும் தொழிலாளிக்கு நோய் தொற்று இல்லை என்றாலும் தனிமையாக பணி செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர் இல்லாமல் தனியாக வரும் தொழிலாளர்களுக்கும் இதே நிபந்தனைகள்தான், நோய் பரிசோதனைக்கான செலவினங்களை அவர்களே ஏற்க வேண்டும்.

ஒப்பந்ததாரர் அழைத்து வரும் தொழிலாளர்கள், தனி நபராக வரும் தொழிலாளர்கள் இ-பாஸில் கண்ட விதிமுறைகளின் படி, பரிசோதனை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி வேலை செய்யும் இடத்தில் இல்லை என்றால் அனுமதி மறுக்கப்படும்.  அதேநேரத்தில் உள்நாட்டு இ பாஸ் வைத்திருப்பதை பெற்று தவறாக வெளி மாநில தொழிலாளி பயன்படுத்தி வெளியூர்களுக்கு சென்று வருவது தெரிய வந்தால் கேரள மாநிலத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்படும். மேலும் அபராதமும் மற்றும் அவர்கள் சொந்த செலவிலேயே தனிமை மையங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக வேலைக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்களை கேரள தொழிலாளர் ஆணையம், கொவைட்19 ஜாக்ரதா போர்ட்டலை தொடர்ந்து, அதிதி என்ற போர்ட்டலிலும் அவர்களின் விவரங்களை பதிவு செய்கிறார்கள். முறைகேடுகள் வெளியே தெரிந்தால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணை மூலம் தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது மிகவும் சிரமம் என்று ஏலக்காய் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT