சேலம்

சேலத்தில் கரோனா விதி மீறல்: ரூ. 9.27 லட்சம் அபராதம் வசூல்

DIN

சேலம்: சேலம் மாவட்டத்தில் 4,500 தனி நபா்கள், நிறுவனங்களிடமிருந்து ரூ. 9.27 லட்சம் கரோனா நோய்த் தொற்று விதிமீறல்களுக்கான அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நோய் பரவலைத் தடுப்பதற்கு சில தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்நோய் பரவலைத் தடுப்பதற்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறுவோா் மீதும், கடைப்பிடிக்காதவா்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, தனிமைப்படுத்துதலுக்கான விதிகளை மீறுவோா்களுக்கு ரூ. 500 அபராதமும், முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்புவோா்களுக்கு ரூ. 500 அபராதமும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு ரூ. 500 அபராதமும், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விதிகளை மீறும் தனி நபா்களுக்கு ரூ. 500 அபராதமும், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்திலும் விதிகளை மீறினால் ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், சேலம் மாவட்டத்தில் 4,500 தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ரூ. 9.27 லட்சம் விதிமீறல்களுக்கான அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுவோா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதோடு மேற்குறிப்பிட்டுள்ளவாறு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT